தீபாவளிக்கு உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாகும் எனிமி

நடிகர் விஷால் பேச்சு

1

வரும் தீபாவளிக்கு விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள பிரமாண்ட திரில்லர் படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி”. பட வெளியீட்டையொட்டி மீடியா, பத்திரிக்கையாளர்களை படக் குழுவினர் சந்தித்தனர். விஷால், ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார். இசை அமைப்பாளர் (பின்னணி இசை) சாம் சி.எஸ்,, வசனகர்த்தா ஷான் கருப்பசாமி, அரங்க அமைப்பாளர் ராமலிங்கம் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்து கொண்டனர்
இதில் விஷால் பேசியதாவது:
என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கி றேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
நீண்ட நாட்கள் கடந்து பத்திரிகை நண்பர்களான உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.
எனிமி தீபாவளிக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு இந்த தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். இயகுனர் ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப்படம். ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். ஏற்கனவே அவருடன் அவன் இவன் செய்திருக்கிறேன் இந்தப்படமும் சூப்பராக இருக்கும். இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும் போதும் இதே நல்ல ரசனையோடு இருக்கும். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன்.
மிருணாளினி ஆல்வேஸ் வெல்கம். நன்றாக நடித்திருக்கிறார். அடுத்தமுறை, தயக்கமில் லாமல் நீங்கள் நடிக்கலாம். கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி..ராஜசேகர் சார் அசத்தியிருக்கிறார். தமனின் பாடல்களும் , சாம்.CS ரீ-ரிகார்ட்டிங்கும் மிரட்டல். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். 600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகபோகிறது. தீபாவளிக்கு தமிழ்நாடு ஆந்திரா, தெலங்கான கர்நாடகா மும்பை மற்றும் உலகமெங்கும் இப்படம் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக் கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.
படத்தை பற்றி யாராவது விமர்சனம் செய்யக்கூடும் அது பற்றி கவலையில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இப்படியொரு படம் எடுத்திருப்பது பெரிய விஷயம். எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். ரசிகர்கள், மக்களின் ஆதரவுடன் இப்படம் பெரிய வெற்றி படமாக அமையும்.
ஆர்யா பேசியதாவது:
எனிமி படம் மிகப்பிரமாண்டமாக படமாகி உள்ளது. விஷாலும் நானும் இதில் இணைத்து நடித்தத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. எனக்கான காட்சிகளை அதிகமாக வைக்கவேண்டும், அழுத்தமாக வைக்கவேண்டும் என்று இயக்குனரிடம் விஷால் கூறியிருக்கிறார். மற்ற யாரும் இப்படி கூறுவார்களா என்பது தெரியாது. படம் நன்றாக வந்திருக்கிறது. மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறேன்.
நடிகை மிருனாளினி ரவி:
எனிமி பெரிய பட்ஜெட் படம் அதில் எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விஷால் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக நடிப்பார். அவர் படப்பிடிப் பிலும் கோபமாக இருப்பார் என்று பயந்தேன் ஆனால் அவர் அன்பாக பழகினார். இயக்குனர் அனந்த் சங்கர் என்னை ஹீரோயினாக தேர்வு செய்ததற்கு நன்றி.
நடிகர் கருணாகரன்: எனிமி படத்தில் இரண்டு ஹிரோக்களுக்கும்ம் டென்ஷனான வேடம், எனக்கு ரிலாக்ஸான வேடம். இருவருடனும் நான் நடித்துள்ள காட்சிகள் ரசிக்கும்படியும் கலகலப்பூட்டும் வகையிலும் வந்திருக்கிறது.
தயாரிப்பாளர் வினோத்குமார்:
நான் தனுஷ் சாருடன் இணைந்து படங்கள் தயாரித்திருக்கிறேன் அதில் பல படங்கள் வெற்றி படங்கள். தயாரிப்பு துறையில் எனது வழிகாட்டி அவர்தான். தனியாகவும் 2 சிறிய படங்கள் தயாரித்திருக்கிறேன். விஷால் சாருடன் படம் செய்ய கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தை கே பி பிலிம்ஸ் பாலு தயாரிப்பதாக இருந்தது. அவர் மறைந்துவிட்டார். அந்த படம் இயக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தத்து. எனிமி படம் தற்போது வெளியாவதை எங்கிருந்தாவது பார்த்து பாலு சார் மகிழ்ச்சி அடைவார். ஆனந்த்சங்கர் ஹாலுவுட்டுக்கு நிகராக எனிமி படத்தை இயக்கி உள்ளார்.
இயகுனர் ஆனந்த் சங்கர்:
ஏற்கனவே நான் செய்த 2 படங்களையடுத்து எனிமி படம் இயக்கி உள்ளேன். நான் படங்களுக்கு இடையில் வருட கணக்கில் இடைவெளி விட காரணம் படத்தை ரசிகர்கள் பார்க்கும்போது பிரமாண்டமும் இருக்க வேண்டும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் காரணம். எனிமி படம், நான் இயக்கிய படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அந்த அரிய தயாரிப்பாளராக எனக்கு அமைந்தார் வினோத். எல்லா கதாபாத் திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்கள் வேண்டும் என்பதை அவரே வலியுறுத்தினார். அதற்கான பலன் படத்தில் இருக்கும். எல்லோரும் ரசிக்கும்படி எனிமி இருக்கும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
அனைவரையும் பி ஆர் ஓ ரியாஸ் அஹமத் வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.