திருப்பதியில் நடிகர் விஷால்!

வேண்டுதல் நிறைவேற்றினார் !!

1

 

நாளை தீபாவளி வெளியீடாக எனிமி வெளியாகவுள்ள நிலை யில், படத்தின் புரொமோ ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் எனிமி படக்குழு புரொமோ ஷன் பணிகளை முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றது.
இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறை வேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக அவரால் செல்ல முடிய வில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ்திருப்பதியிலி ருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.