விஷாலின் ‘சக்ரா’ டெஸ்ட் ப்ரிவியூவிற்கு வரவேற்பு!

19

நடிகர் விஷால் தனது பிலிம் பேக்டரி பட நிறுவன சார்பில் தயாரித்து நடித்த படம் சக்ரா. எம்.எஸ். ஆனந்தன் இயக்கி யுள்ளார்.
தமிழ்திரையுலகில் புதிய முயற்சியாக  ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் அபிப்ராயங்கள் மூலம் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர்.
டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறு வதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர் கள் ஆணா பெண்ணா? வயது, தொழில், படத்தில் நேர்நிலை அம்சம் எது? படத்தில் உயிர்ப் போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது? எதிர்மறை அம்சம் எது? பிடிக்காத காட்சி எது? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன, நட்சத்திரங்களின் எண்ணிக்கைகளில்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுப் பதில்கள் பெறப்பட்டன.
பெரும்பாலானவர்கள் நேர் நிலையான பதில்களை அளித்து தங்களது திருப்தியை யும் மகிழ்ச்சியையும் வெளிப் படுத்தியுள்ளனர் .இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.