சுசீந்திரன் தாயார் மரணம் விஷால் அனுதாபம்..

17

வெண்ணிலா கபடி குழு தொடங்கி பலவேறு வெற்றி படங்களை இயக்கி இருப்பவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் பொங்க்ல தினத்தில் திரைக்கு வந்தது. இந்நிலையில் சுசீந்திரன் தாயார் ஜெயலட்சுமி நேற்று காலமானார், அவரது மறைவுக்கு நடிகர் விஷால் அனுதாம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன்  தாயார் ஜெயலக்‌ஷ்மி  மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு, மிக பெரிய இழப்பு ஆகும். அவருக்கும், அவரது சகோதரர் தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தும் கொள்கிறேன். மேலும் அவரது தாயார் ஆன்மா சாந்தியடையவும் வேண்டிக் கொள்கிறேன் . RIP!

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.