விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு.

தாமிரபரணி, ஆம்பளக்கு பிறகு கைகோர்ப்பு

1

 

அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார்.
விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.
இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இணைந்து #ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.
ஏ.வினோத்குமார் டைரக்ட ராக அறிமுகமா கிறார்.
இசை யுவன் சங்கர் ராஜா.
ஒளிப்பதிவு பாலசுப்ர மணியெம். Pro ஜான்சன்.

Leave A Reply

Your email address will not be published.