நடிப்பு : ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ,இளவரசு, பகவதி பெருமாள்
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்
படதொகுப்பு: சதீஷ் சூர்யா
எழுத்து & இயக்கம்: பத்மநாபன்
தயாரிப்பு: பாலா ஸ்டூடியோஸ், ஸ்டூடியோ 9, Shark Pictures
வீ ஆர் எஸ் வாங்கிவிட்டு பாட்டிலும் , கையுமாக வாழ்க்கைய போட்டும் போலீஸ் ஒருவரது முன்னாள் மனைவி விபத்தொன்றில் மரணம் அடைகிறாள். அந்த விபத்து குறித்து விசாரித்த எக்ச் போலீஸ் முயல்கையில் அது ஒரு மாபெந்ரும் மெடிக்கல் மாஃபியா கும்பலின் சதி என்று தெரிய வருகிறது. அந்த குற்றவாளிகளை எக்ஸ் போலீஸ் கண்டுபிடிப்பதுதான் கதை
மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த விசித்திரன் திரைப்படம், மலையாளத்தில் இந்த படம் ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் வகையை சார்ந்தது. இந்த மாதிரி திரைப்படங்களுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு . ஆனால் தமிழ் சினிமாவில் ஸ்லோ பர்ன் திரில்லர் வகை படங்கள் வருவதில்லை, அதனால் அதற்கு வரவேற்பும் இல்லை. விசித்திரன் திரைப்படம் இந்த நிலையை மாற்றியுள்ளது. தமிழுக்கு ஏற்றார் போன்ற ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்துள்ளது.
ஆர் கே சுரேஷ் தனது நடிப்பாற்றலை வெளிகொணர்வதற்கான படமாய் இது அமைந்துள்ளது. அவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மலையாள பதிப்பின் வீரியம் குறையாமல் தமிழுக்கு கொண்டுவந்ததில் ஆர்கே சுரேஷூக்கும் பெரிய பங்கு உண்டு. மலையாளத்தில் இயக்கிய அதே பத்மநாபன், தமிழ் பதிப்பையும் டைரக்ட் செய்துள்ளார், அதனால் படம் தரம் குறையாமல் வந்துள்ளது. படத்தில் இளவரசும், மாரிமுத்து இருவரும் தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ஜீவியின் இசை படத்தின் ஜீவன் குறையாததற்கு முக்கிய காரணம்.
இன்று மிகப்பெரிய வணிகமாக இருப்பது மருத்துவமும் அதனைச் சுற்றியுள்ள தொழில்களும். ஆனால் மனித உயிர்களைக் காக்க வேண்டிய இந்த மருத்துவத்துறையில் நிகழ்வதாகக் காட்டப்படும் இந்த உடலுறுப்புத் திருட்டு விசயங்கள் நம்மை அதிர்ச்சி படுத்தும். மருத்துவ மாஃபியா கதையை த்ரில்லர் கதையாக மிக நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள்.
குறைகள் பெரிதாக ஏதுவும் இல்லாத நேர்த்தியான ரீமேக்காய் வெளிவந்துள்ளது விசித்திரன்.
குறிப்பாக திரில்லர் ரசிகர்களுக்கான விருந்தாய் இருக்கும் விசித்திரன்