ரைசாவுக்கு ஐடியா கொடுத்த விவேக்

12

பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்த ரைசா தற்போது, எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை அழ வைக்கின்ற படம் பார்க்க விரும்புகிறேன்.. யாராவது சொல்லுங்களேன்” என கேட்டிருந்தார்.

பலர் இந்தி உட்பட சில படங்களை குறிப்பிட்டிருந்தனர். ரைசாவின் பதிவை பார்த்த விவேக் மட்டுமே மற்றவர்களில் இருந்து மாறுபட்டு, “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பாபு’ படத்தை பாருங்கள். இறுதியில் நீங்கள் அழுது விடுவீர்கள்” என தனது யோசனையை கூறியுள்ளார். அதற்கு ரைசாவும், “உங்கள் பரிந்துரைக்கு நன்றி.. இன்றே அந்த படத்தை பார்த்து விடுகிறேன்” என பதில் அளித்துள்ளார். இவர்கள் இருவரும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.