வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

48

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. .சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகியிருந்தது… வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது ட்ரெய்லர் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் 1.5மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. எஸ். ஜெயக்குமார், ஜெ.காவேரி, திரு.ஜெ.சபரிஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். திரு.ஜெ. சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.