வி பி எப் கட்டணம்: தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

தமிழ் பட தயாரிப்பாளர்கள் போல் களத்தில் குதித்தனர்..

15

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாள்ர்கள் சங்கத்தினர் தியேட்டர்களுக்கு வி பி எஃப் கட்டணம் கட்டமாட்டோம் என்று கடந்த மாதம் போர்க்கொடி உயர்த்தினர். புதுபடங்கள் வெளியிட மாட்டோம் என்ற்ம் அறிவித்தனர். தயாரிப்பளர்கள், தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு இதைல் உடன்பாடு ஏற்பட்டது. அதுபோல் தற்போது  நடப்பு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்களின் போர்க்கொடியுயர்த்தி உள்ளனர். மல்டி பிளக்ஸ் தியேடர்களுக்கு அவர்கள் அனுப்பி உள்ள அவர்களின் 30.11.2020 தேதியிட்ட அறிக்கை:

நீண்ட நாட்கள் ஊரடங்கிற்குப் பின் இப்போது திரையரங்குகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் இருக்கும் எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பின்பு நாம் இணைந்து புதிதாக திரைப்படங்களை வெளியிடுவது சரியானதாக இருக்கும்.

1. தயாரிப்பாளர்:திரையரங்கம் ஆகியவர்களுக்கு, தற்போதுள்ள
முதல் வாரம் 55:45,
2-வது வாரம் 45:55,
3-ம் வாரம் 40:60,
4-ஆம் வாரம் 35:65
என்னும் வாராந்திர சதவீதங்கள் இனி
60:40,
50:50,
40:60
என்று திருத்தப்படும்

2. AP & T அதாவது மொத்த ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் முழுவதும் மேற்குறிப்பிட்ட சதவீதங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

3. வி.பி.எஃப் கட்டணங்கள் தயாரிப்பாளரால் இனிமேல் செலுத்தப்பட மாட்டாது.

4. சினிமா டிரெய்லர்கள் இனி இலவசமாக ஔிபரப்பப்பட வேண்டும். மேலும், வளாகத்திற்குள் காட்சிக்கு தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட அனைத்து சினிமா தொடர்பான விளம்பரப் பொருட்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது.

5. தெலுங்கு படங்களுக்கு ஷோ முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

6. காம்போ பொதிகள் எனப்படும் டிக்கெட்டுடன் திண்பண்டங்கள் என்ற வகையான டிக்கெட் விற்பனை இனி கூடாது.

7. டிக்கெட்டின் விலைகளை நேரத்திற்குத் தகுந்தவாறு, படத்திற்குத் தகுந்தவாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் விருப்பத்தின்படி செயல்படுத்தப்பட வேண்டும்.

8. டிக்கெட் தொடர்பான விற்பனை தளங்களில், அதாவது ஆன்லைன் டிக்கெட் விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்த வருவாயும், தயாரிப்பாளருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

8. பராமரிப்புக் கட்டணங்களை இனிமேல் தயாரிப்பாளரின் ஷேரிலிருந்து வசூலிக்கப்படக் கூடாது.

9. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்குள்ளும் தயாரிப்பாளர்களின் பங்குத் தொகையினை தியேட்டர்கள் வழங்க வேண்டும்.

10. அதிக எண்ணிக்கையிலான காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கினால், மல்டிபிளெக்ஸ் செயல்படுத்தப்பட வேண்டும்.

11. மல்டிபிளக்ஸ் 100% ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்படும் வரை தங்கள் படத்தை வெளியிட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன?

எங்களின் கோரிக்கைகள் உங்கள் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என உறுதியாக நம்புகிறோம்.

இப்படிக்கு,
நடப்பு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கில்டு (ATFPG)

Leave A Reply

Your email address will not be published.