வி.பி.எப். கட்டணத்தை ரத்து செய்ய போராட்டம் டி.ராஜேந்தர் அறிவிப்பு

19

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வி.பி.எப். கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பாக்கி தொகையை வழங்கவும் கியூப் மற்றும் இதர சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களிடம் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அந்த நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.

படத்தை திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணம் ரூ.1,500 தவிர எங்களால் வி.பி.எப் மற்றும் எந்த கட்டணமும் செலுத்த முடியாது. வட இந்திய கம்பெனிகளுக்கு வி.பி.எப் கட்டணம் வாங்கி கொள்ளாமலேயே படத்தை திரையிட வழிசெய்யும்போது, எங்களுடைய தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களிடம் வி.பி.எப் கட்டணம் வசூலிப்பது நியாயமாக தெரியவில்லை.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் பதில் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.