‘இதழும் இதழும் இணையட்டுமே’ வெப்சீரீஸ்

3

அப்பா காண்டம் குறும்பட இயக்குநரின் அடுத்த படைப்பு இதழும் இதழும் இணையட்டுமே” வெப்சீரீஸ்.

சன்னிலியோன், யோகிபாபு, ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,
ஆகியோர் நடிக்கும் ”ஓ மை கோஸ்ட்” என்ற படத்தை VAU மீடியா எண்டர்டெயிண்மெண்ட் & White Horse Studios இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தற்பொழுது ’அப்பா காண்டம்’ என்னும் குறும்படத்தை இயக்கிய ஆர்வாவின் இயக்கத்தில் ”இதழும் இதழும் இணையட்டுமே” என்ற பெயரில் ஒரு வெப்சீரீஸை தயாரித்திருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸில் கதாநாயகனாக ’பிளாக் ஷீப்’ கலையரசன் தங்கவேல், ’விஜய் டிவி’ அர்ச்சனா குமார், நியூஸ் 18 காம்பியரர் முபாஷீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான, நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த ”இதழும் இதழும் இணையட்டுமே” வெப்சீரிஸ்’ன் கதை ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

”என்னடா.. ஒரு பெண், ஒரு ஆணிடம் இப்படி ஒரு விஷயத்தை கேட்கிறாளே?” என்று ரசிகர்களை சற்று திடுக்கிட வைக்கும். அந்த கதை களம் முழுவதுமே மிகவும் நகைச்சுவையுடன் அமைக்கப்பட்டிருப்பதாக அதன் இயக்குனர் தெரிவித்தார்.

இவர் ஏற்கனவே அப்பா காண்டம் என்ற குறும் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குறும்படம் இதுவரை 62 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. அந்த குறும்படத்தினால்தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த வெப்சீரிஸ் ஏழு பாகங்களாக வெளி வர உள்ளது.

முதல் பாகத்தை இன்று White Horse Media என்ற யூடியூப் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்..

Idhazhum Idhazhum Inayattume Episode 1 Video Link :-

Leave A Reply

Your email address will not be published.