ரீமேக் படம் இயக்க மாட்டேன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

12

விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படம், வரும் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசாகிறது. படம் குருத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது,

படத்தில் விஜய் பஞ்ச் டயலாக்கும், அரசியலும் பேசமாட்டார். யதார்த்தமான கதையில் பவர்ஃ புல் வில்லன் தேவைப்பட்டதால் விஜய் சேதுபதியை அணுகினேன். அவருக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார். படத்தில் அவர் மிக மோசமான வில்லன்.

மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன், பூவையார் உள்பட ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் இருக்கும். முழு நீள கமர்ஷியல் படம் என்றாலும், முடிவில் ஒரு மெசேஜ் இருக்கும். அதனால்தான் படத்தின் நீளம் 3 மணி நேரம் இருக்கிறது. விஜய் இயக்கத்தில் நான் நடித்ததாக தகவல் வெளியானது.நான் நடிக்கவில்லை. ஒரு காட்சியில் நிற்ப்பேன்.

கோலிவுட்இயக்குனர்களை முன்னணி ஹீரோக்கள் மறைமுகமாக கவனிக்கிறார்கள். அவர்களதுபடைகளை பார்த்து மதிப்பிடுகின்றனர். அந்த அடிப்படையில் தான் கார்த்தி, விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை நான் இயக்கம் வாய்ப்பு அமைந்தது. மாநகர, கைதி ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கை இயக்க அழைப்பு வந்தது. ஏற்கனவே பணியாற்றிய படத்தை ரீமேக் செய்வதில் ஆர்வம் இல்லாததால் மறுத்துவிட்டேன்.

Leave A Reply

Your email address will not be published.