புதியபடங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம்: பாரதிராஜா அறிவிப்பு

89

கடந்த 7 மாதமாக  கொரோனா வைரஸ் காரண மாக திரை அரங்குகள் மூடியிருந்த நிலை யில் வரும் 10ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித் தது. 50 சதவீத இருக்கை களுடன் அனுமதிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்  அறிவித்தி ருக்கிறது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப் பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய வுடன் இனிமேலும் விபிஎப் என்கிற கட்டணத்தை வசூலிக் கக்கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனை வருக்கும் மற்றும் அனைத்து டிஜிட்டல் புரஜக்‌ஷன் நிறுவனங்களுக்கும் முறை யாக கடிதம் அனுப்பி அதில் 12 வருடங்களுக்கு மேலாக கட்டி வரும் வி பி எப் என்ற கட்ட ணத்தை வாராவாரம் இனி மேல் கொடுக்க முடியாது டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங் க்ளோனிங் டெலிவரி மற்றும் சேவைக் கான ஒருமுறை கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தரமுடியும் என்று தெரிவித்தி ருந்தோம். திரையரங்கில் உள்ள புரஜக்டர் சம்பந்தப் பட்ட லீஸ் தொகையை திரையரங்குகள் தான் கட்ட வேண்டும் தயாரிப்பாளர் கள் அல்ல என்பதையும் தெளி வாக குறிப்பிட்டு இருந்தோம் அத்தகைய ஒரு ஒன் டைம் கட்டணம் முறைக்கு ஒப்புக் கொள்ள வில்லை என்றால் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வந்தாலும் எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.
நூறு பேருக்கும் மேல் நடப்பு தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்து தெரிவித்த போதிலும் திரையரங்கு உரிமையாளர்களும் டிஜிட்டல் ப்ரஜெகஷன் நிறுவனங்களும் எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் நாங்கள் விபிஎப் கட்டணத்தை தொடர்ந்து வாங்குவோம் என்று எங்களுக்கு தெரிவித்து உள்ளனர். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக் கைகளில் ஒன்று கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளதால் நடப்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருங்கி ணைந்து வி பி எப் கட்டணத் திற்கு ஒரு முடிவு வரும் வரை தங்களின் புதிய திரைப்படங் களை வெளியிடுவதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விபிஎஃப் கட்டணப் பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை அனைத்து தயாரிப் பாளர்களும் தங்களின் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்

இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.