ரைட்டர் (திரைப்பட விமர்சனம்)

4

படம்: ரைட்டர்

நடிப்பு: சமுத்திரக்கனி, இனியா, லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணியம் சிவா, ஜி.எம்.சுந்தர், கவிதா பாரதி, ஆண்டனி, லார் லேமுவேல், லக்கி குமார், திலீபன், போஸ் வெங்கட்,

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா

தயாரிப்பு:பா.ரஞ்சித், அபையான்ந்த் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த்

இயக்கம்: ஃபிராங்ளின் ஜேக்கப்

 

போலீஸ் யூனியனுக்காக பல ஆண்டுகளாக வழக்கு தொடுத்து போராடுகிறார் போலீஸ் நிலையத்தில் ரைட்டராக இருக்கும் சமுத்திரக்கனி. இது உயர் அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவரை பனிஷ்மென்ட் டிரான்பஸிரில் வேறு ஊருக்கு மாற்றுகின்றனர். அங்கு சென்று வேலையில் இணையும் சமுத்திரக்கனி, ரைட்டர் வேலைக்கு பதில் கைதியை காவல்காக்கும் வேலைக்கு அனுப்படு கிறார். ஓய்வு பெற சில மாதங்களே இருக்கும் நிலையில் காவல் காக்கும் டூட்டியை செய்கிறார். அவர் காவல் காக்கும் குற்றவாளி தப்பிச் செல்ல பார்க்கி றான். படாதபாடுபட்டுஅவனை பிடிக்கிறார். தான் எந்த குற்றமும் செய்யவில்லை. தன்னை போலீஸார் காரணமே சொல்லாமல் பிடித்து வைத்திருப்பதாக சமுத்திரக்கனியிடம் சொல்கிறான். அவன் மீது எந்த தவறும் இல்லை என்பதை தெரிந்துக்கொண்டு அவனை ஜாமினில் வெளி வர ஏற்பாடு செய்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் அந்த நபர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர். அதற்கு காரணம் என்ன அவனை போலீஸ் பிடியிலிருந்து சமுத்திரக் கனியால் காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.

ரைட்டராக சமுத்திரக்கனி மிகப்பொருத்தமான தேர்வாக ஜொலிக்கிறார். சில மாதங்களில் ரிடையர்ட் ஆகப்போவது தெரிந்தும் சட்டவிரோதமாக இளைஞனை கைது செய்து மறைத்திருப்பதை அறிந்து திகைக்கும் அவர் கைதாக்கப்பட்டிருக்கும் இளைஞனை ஜாமினில் வெளியில் எடுக்க செய்யும் உதவிகள் மனிதாபிமானத்தை பிரதிபலிக்கிறது.

போலீஸிக்கு சங்கம் கேட்டு கோர்ட்டில் சாட்சி சொன்ன பிறகு காவல்நிலையும் திரும்பும் சமுத்ரக்கனியை போலீஸ் நிலையத்தில் நிற்க வைத்து சரமாரியாக திட்டி தீர்க்கும் போஸ் வெங்கட் அவரை கன்னத்தில் பளார் அறைவிட்ட பதறவைக் கிறார். அந்த அடியை தாங்க்கிக்கொண்டு அடுத்த நொடியே முகத்தை கழுவிக்கொண்டு வேலையில் இறங்கிவிடும் சமுத்திரக்கனி நடிப்பில் அசத்துகிறார்.
இன்னொரு பக்கம் இரண்டு மனைவிகளின் பிக்கல், பிடுங்களால் பரிதவிக்கும் கணவனாக சமுத்திரக்கனி குடும்ப சிக்கலை உதிர்த்திருக் கிறார்.

போலீஸ் உயர் அதிகாரியாக வந்து வடநாட்டு வாடை கலந்து தமிழ் பேசும் கவின் ஜெய்பாபு வில்லன் வேடத்தில் அலட்டல் காட்டி மிரட்டுகிறார்.

சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட இளைஞனாக வரும் ஹரிகிருஷ்ணா போலீசிடம் அடிவாங்கியே பரிதாபப்பட வைக்கிறார். இவரது அண்ணனாக வரும் சுப்ரமணியம் சிவா அப்பாவி மனிதராகவும், தம்பியை காப்பாற்ற துடிக்கும் பாசக்கார அண்ணனாகவும் மாறிவிடுகிறார்.
பிரதீப் காளிராஜா காட்சிகளை தெளிவாக படமாக்கி இருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையில் காட்சிகள் மெருகேறுகிறது.

இயக்குனர் ஃபிராங்ளின் ஜேக்கப் புதிய கோணத்தில் போலீஸ் கதையை படமாக்கி இருப்பதுடன் சில ரகசியமான விஷயங்களையும்,  கூடவே ஜாதி பாகுபாடு காட்டும் அதிகாரிகளின் வன்மத்தையும் துணிச்சலாக அம்பலப்படுத்தி இருக்கிறார்.

ரைட்டர் – அவசரமாக முடிக்கப்படும் சில போலீஸ் வழக்கின் சீக்ரெட்டை உடைக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.