அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் ‘யாமா’

38

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் “யாமா” திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் செகண்ட் லுக் வெளியாகியிருந்தது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடத்த பெரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெகுஜன மக்களின் பிடித்த ஜானர்களின் ஒன்றான சஸ்பென்ஸ் சைக்கோ வகை திரைப்படமாக அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ சிவன்யா கிரியேசன்ஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தரமான படங்களுக்கு எப்போதுமே ஆதரவு தரும் மக்கள்,
நிச்சயம் இந்த யாமா திரைப்படத்தை வெற்றி பெற வைக்கவேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.