தயாரிப்பாளர் ஆனார் யஷ்

14

கேஜிஎப் படம் மூலம் நாடு முழுவதும் பிரபலம் ஆனார் கன்னட ஹீரோ யஷ். இந்த படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என கூறப்பட்டது. கொரானா பாதிப்பு காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என தெரிகிறது. இதற்கிடையில் யஷ், தயாரிப்பாளராக மாற முடிவு செய்துள்ளார். கேஜிஎப் 2 படம் திரைக்கு வந்ததும் பட தயாரிப்பில் அவர் ஈடுபட உள்ளார். பான் இந்தியா படமாக ஒரு படத்தை அவர் நடித்து தயாரிக்க இருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.