இந்தி ஆல்பத்தில் யுவன் சங்கர் ராஜா – ரஷ்மிகா மந்தனா

90

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. யுவன் படங்களுக்கு இசை அமைப்பதுடன் இசை ஆல்பம் உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறார். முதல் முறையாக இந்தியில் உருவாகியுள்ள டாப் டக்கர் என்ற வீடியோ இசை ஆல்பத்தை இசையமைப்பதோடு பாடல் காட்சியில் நடித்தும் இருக்கிறார்  யுவன் சங்கர் ராஜா.

இந்த இசை ஆல்பத்தில் ராப்பர் பாட்ஷா, ஜோனிதா காந்தி மற்றும் உச்சனா அமித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த ஆல்பத்தில் ரஷ்மிகா மந்தனாவும்  பாடல்பாடி நடனமாடியுள்ளாராம். அமர்பிரீத் சப்ரா இயக்கியுள்ளார்.

இது சம்மந்தமாக புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.